search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர் காப்பீடு தொகை"

    • மூத்த உறுப்பினர் கணேசன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.
    • ஒன்றிய குழு,கிளை பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கபிஸ்தலம்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பாபநாசம் ஒன்றிய 24- வது மாநாடு கபிஸ்தலம் அருகே உள்ள ஈச்சங்குடி கிராமத்தில் விவசாயிகள் சங்க பொறுப்பாளர் முருகேசன் தலைமையில்நடைபெற்றது. மூத்த உறுப்பினர் கணேசன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.

    ஒன்றிய குழு உறுப்பினர் புகழேந்தி வரவேற்பு ரையாற்றினார். மாநாட்டில் சங்க உறுப்பினர் கிருஷ்ணன், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் மறைவிற்கு இரங்கல் செலுத்தப்பட்டதுஒன்றியச் செயலாளர் கனகராஜ் வேலை அறிக்கை வாசித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன் மாநாட்டை துவங்கிவைத்து உரையாற்றினார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மு.அ.பாரதி, ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர்

    ஆர்.தில்லைவனம், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பரமசிவம், ஒன்றிய செயலாளர் பொன்.சேகர், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஈச்சங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி, மாதர் சங்கம் சந்ரா, விதொச ஒன்றிய செயலாளர் இளங்கோவன், இளைஞர் பெருமன்றம் லட்சுமி நாராயணன்ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    மாநாட்டில் நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அறையபுரம் தட்டுமால் படுகை விவசாயிகளுக்கு உடனடியாக ரத்து வாரி பட்டா வழங்கிட வேண்டும்.விவசாயத்தை நாசப்படுத்தும் காட்டுப் பன்றிகளை உடனடியாக பிடித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய குழு,கிளை பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×